Accident News | இமைக்கும் நேரத்தில் விபரீதம்... பேருந்து மோதி 2 பேர் துடிதுடித்து பலி

x

இமைக்கும் நேரத்தில் விபரீதம்... பேருந்து மோதி 2 பேர் துடிதுடித்து பலி

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து மோதிய விபத்தில், பைக்கில் சென்ற 3 பேரில், 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பரமக்குடியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் கிஷோர், பால்பாண்டி, கரண்குமார் ஆகிய 3 பேரும் பைக்கில், காரைக்குடியிலிருந்து ராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த அரசு பேருந்து, இவர்களின் பைக் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதையடுத்து, 3 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலைகளில், கிஷோர் மற்றும் பால்பாண்டி ஆகிய 2 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே, தேவகோட்டை அரசு மருத்துவமனையில், கரண்குமார் தீவிர சிகிச்சையில் உள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்