போலீஸ் குடும்பத்திற்கு உயிர் பயம் காட்டிய நபர் - தீயாய் பரவும் வீடியோ

x

சேலம் மல்லூர் அருகே உள்ள வாழகுட்டப்பட்டி பகுதியில் சேர்ந்த சேகர் என்பவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவரது மகன் முரளி என்பவர் சேலத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.இதே பகுதியில் வீடு கட்டி வசித்து வருகிறார்.இந்த நிலையில் அருகில் உள்ள வீட்டை சேர்ந்த ரவி என்பவருடன் நிலத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி ரவி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்றைய தினம் அறிவாளை எடுத்து வந்து வெட்டுவதற்கு முயற்சித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.இந்த வீடியோவில் அறிவாளை கையில் வைத்துக் கொண்டு ரவி என்பவர் ஆபாசவார்த்தைகளால் பேசிக்கொண்டு கொலை மிரட்டல் விடும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்