வடக்குபேயன்குழி, கன்னியாகுமரி||குமரியில் அண்ணி என்றும் பாராமல் ஓட ஓட விரட்டி தாக்கிய கொழுந்தன்
குமரியில் அண்ணி என்றும் பாராமல் ஓட ஓட விரட்டி தாக்கிய கொழுந்தன்
வடக்குபேயன்குழி பகுதியைச் சேர்ந்த சிப்ஷன் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், அவரது மனைவி ரூவியும் மகளும் வீட்டில் வசித்து வருகின்றனர்.
சிப்ஷனின் சகோதரர் பெல்சனுக்கும் ரூவியின் குடும்பத்தினருக்கும் சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரூவி வீட்டின் அருகே பெல்சன் குப்பைகளை கொட்டி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார்.
இதனை ரூவி தட்டிக்கேட்ட நிலையில், ஆத்திரமடைந்த பெல்சன் திட்டம்தீட்டி ரூவி வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டையால் அடித்துள்ளார்.
அப்போது, செய்வது என்று அறியாமல் தாக்குதலில் இருந்து தப்பிக்க ரூவி அலறியபடி ஓடிய நிலையில், அவரை பெல்சன் ஓட ஓட விரட்டி சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.
