``இன்னும் 10 நாட்களில்..'' | அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன செய்தி
"அரசு மருத்துவமனைகளில் 10 நாட்களில் மருத்துவர்கள் நியமனம்"
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலி பணியிடங்கள் அனைத்தும் 10 நாட்களில் நிரப்பப்பட்டு விடும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 கோடியே 20 லட்ச ரூபாய் ரூபாய் செலவில் புதிய சிடி ஸ்கேன் கருவி, 61 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் செலவில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி என மொத்தம் 2 கோடியே 81 லட்ச ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியன், சக்கரபாணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 10 நாட்களில் மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு விடும் என்றும் அவர் தெரிவித்தார்.
