சென்னையில் மனைவியுடன் பிரியாணி வாங்க சென்ற கணவருக்கு நேர்ந்த விபரீதம்
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவல்லிகேணி பகுதியில் குமரேசன் என்பவர் தனது மனைவியுடன் பிரியாணி வாங்குவதற்காக நடந்து சென்றார். அப்போது, ஆட்டோவில் வந்த சிலர் முன்பகை காரணமாக கணவன் மனைவி ஆகிய 2 பேருக்கும் மிரட்டல் விடுத்தனர். அதோடு, குமரேசன் மீது கத்தியை வீசி அவரை கொலை செய்ய முயன்றதாக தெரியவருகிறது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், ஐஸ்அவுஸ் காவல் நிலைய போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில், குமரேசனை கொலை செய்ய முயன்ற சம்பந்தப்பட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதில், பிரசாந்த் மற்றும் சத்யா ஆகியோர் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என தெரியவந்துள்ளது.
Next Story