சென்னையில் கல்லூரி மாணவர் தலைமுடியை பிடித்த போலீஸ் 9 மாதங்களுக்கு பின் தேடிவந்த ஆப்பு
சென்னை துரைப்பாக்கத்தில் கல்லூரி மாணவரை தாக்க முயன்ற நுண்ணறிவு பிரிவு போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். போலீசார் ஒருவர், கல்லூரி மாணவரின் தலை முடியை பிடித்து பைப்பால் தாக்க முயற்சி செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்து வந்த நிலையில், நுண்ணறிவு பிரிவு காவலர் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்து சுமார் 9 மாதங்கள் இருக்கும் என கூறப்படும் நிலையில், காவலர் ஹரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
Next Story