Chennai பதற்றத்தில் பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்த நபர்..அடுத்த நொடியே நிகழ்ந்த அதிர்ச்சி

Chennai பதற்றத்தில் பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்த நபர்..அடுத்த நொடியே நிகழ்ந்த அதிர்ச்சி

பதற்றத்தில் பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்த நபர்... அடுத்த நொடியே நிகழ்ந்த அதிர்ச்சி - சென்னையில் பரபரப்பு சென்னை அம்பத்தூர் பாரதிநகர் பகுதியில், போக்குவரத்து சிக்னலில் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார், மூன்று இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. தொடர்ந்து, புதூர் காவல் உதவி மையத்தின் மீதும் கார் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. அம்பத்தூரைச் சேர்ந்த பாண்டியன் என்பவர், வீட்டிலிருந்து கள்ளிக்குப்பம் நோக்கிக் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது சிக்னலில் காரை நிறுத்துவதற்காக பிரேக்கிற்குப் பதிலாகத் தவறுதலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து மோதியதில், இருசக்கர வாகனங்களில் சென்ற பலர் காயமடைந்தனர். விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com