பவானிசாகர் நகர்ப் பகுதியில் மனிதர்களை தாக்கும் காட்டுப் பன்றியை லாவகமாக பிடித்த வனத்துறையினர். பொதுமக்கள் நிம்மதி

பவானிசாகர் நகர்ப் பகுதியில் மனிதர்களை தாக்கும் காட்டுப் பன்றியை லாவகமாக பிடித்த வனத்துறையினர். பொதுமக்கள் நிம்மதி
x

பவானிசாகர் நகர் பகுதியில் மனிதர்களை தாக்கும் காட்டுப் பன்றியை வனத்துறையினர் பிடித்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். ஈரோடு மாவட்டம் பவானிசாகர் நகர் பகுதியில் காட்டு பன்றிகள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், ஒரு காட்டுப்பன்றி ஆக்ரோசத்துடன் சுற்றி திரிந்தது . இந்த நிலையில் பவானிசாகர் பேருந்து நிலையம் அருகே மார்க்கெட் சதுக்கம் பகுதியில் ஒரு பெண் ஒரு ஆண் உட்பட ஐந்து பேரை காட்டு பன்றி தாக்கியதில் இருவருக்கு காயம் ஏற்பட்டது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மனிதர்களை தாக்கும் காட்டுப் பன்றியை வனத்துறையினர் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து வனத்துறையினர் பவானிசாகர் நகர் பகுதியில் மனிதர்களை தாக்கும் காட்டுப் பன்றியை பிடிக்கும் முயற்சி மேற்கொண்டனர். இன்று பவானிசாகர் கோழி பண்ணை பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் அருகே நடமாடிய காட்டு பன்றியை வனத்துறையினர் லாவகமாக பிடித்தனர். இதைத்தொடர்ந்து அடர்ந்த வனப் பகுதியில் கொண்டு சென்று விடுவதற்காக பிடிபட்ட காட்டு பன்றியை வாகனத்தில் ஏற்றி சென்றனர். மனிதர்களை தாக்கும் காட்டுப்பன்றியை வனத்துறையினர் பிடித்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்