காசுக்காக 4 வயது சிறுமியை சொந்த பாட்டியே விற்ற கொடூரம்

x

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே, அங்கன்வாடி மையத்திற்குச் சென்ற 4 வயது சிறுமி மாயமான சம்பவத்தில் திடீர் திருப்பமாக, சிறுமியின் சொந்த பாட்டியே சிறுமியை பணத்திற்காக விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. குண்டாக்கல்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா - மீனா தம்பதியின் 4 வயது மகள், கடந்த 30ஆம் தேதி, அங்கன்வாடி மையத்திற்கு சென்றபோது மாயமானார். இதுகுறித்து ராஜா கொடுத்த புகாரின்பேரில், தேவூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, பல்வேறு இடங்களில் விசாரித்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிறுமியின் தந்தை வழி பாட்டியான சாந்தி என்பவர், சிறுமியை அழைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பாட்டியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் குழந்தையை பணத்திற்காக அவர் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, விற்கப்பட்ட குழந்தையை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்