ரீல்ஸ் மோகத்தில் காதலன் ரயிலில் அடிபட்டு பலி- காதலி தற்கொலை

சென்னை அயனாவரத்தில் ரீல்ஸ் மோகத்தில் காதலன் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில், காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியது...

சென்னை அயனாவரத்தில் ரீல்ஸ் மோகத்தில் காதலன் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில், காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியது.

அயனாவரம் சோலையம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுப்பு சௌமியா அண்ணா சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், அவர் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீஸ் விசாரணையில், சுப்பு சௌமியாவின் காதலர் சதீஷ்குமார், ரீல்ஸ் மோகத்தில் ரயிலில் அடிபட்டு இறந்ததும், அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது

X

Thanthi TV
www.thanthitv.com