Chess போட்டியில் கார்ல்சனை ஸ்டன்னாக்கி சாதித்த இந்தியாவின் 9 வயது சிறுவன்

x

செஸ் - கார்ல்சனுடன் டிரா செய்த 9 வயது இந்திய சிறுவன்

ஆன்லைன் செஸ் தொடரில் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனுடன் இந்தியாவைச் சேர்ந்த 9 வயது சிறுவன் டிரா செய்து கவனம் ஈர்த்துள்ளார். தேசிய அளவிலான செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சிறுவன் ஆரிட் கபில் (Aarit Kapil) ஆன்லைன் செஸ் தொடர் ஒன்றில் நார்வே செஸ் ஜாம்பவான் கார்ல்சனுடன் மோதினார். போட்டியில் கார்ல்சன் தோல்வி அடையும் நிலைக்கு சென்ற நிலையில், ஆரிட் கபிலுக்கு நேரம் போதாததால் இறுதியில் டிரா செய்தார். கார்ல்சனை தோல்வியின் விளிம்புக்கு கொண்டு சென்று வியக்க வைத்த சிறுவன் ஆரிட் கபிலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்