முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று முக்கிய மீட்டிங்
சென்னை அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் உள்ளிடடோர் கலந்து கொள்ள உள்ளனர். வரும் 21ஆம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு முக்கியமான சட்ட மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு உள்ள நிலையில், இதில் திமுக எம்.பி.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், எந்தவிதமான விவாதங்களை எல்லாம் எழுப்ப வேண்டும் என்பன பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்டவை குறித்த எதிர்க்கட்சிகளின் சந்தேகங்கள் பெரிய அளவில் எதிரொலிக்கும் என்று தெரியவருகிறது.
