சென்னையில் வரப்போகும் முக்கிய மாற்றங்கள் - வெளியான அறிவிப்பு

x

சென்னையில் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் பார்கிங் கட்டணம் வசூல் செய்வதில் பல முக்கிய மாற்றங்களை கொண்டுவரவுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழகம் மூலம் பார்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டுவருகிறது. கட்டணம் வசூலிக்கும் பணியாளர்கள் மீது புகார் எழுந்த நிலையில், கட்டணம் வசூல் செய்யும் ஊழியர்கள் இனி முறையான அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும், நிறுவனத்தின் சின்னம் பதித்த அங்கி அணிந்திருக்க வேண்டுமென அறிவு றுத்தப்பட்டிருக்கிறது. மேலும் பொதுமக்கள் டிஜிட்டல் வழியாக மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டுமென சென்னை மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

chennai ,chennaicorporation ,carparking ,parking ,thanthitv


Next Story

மேலும் செய்திகள்