இமானுவேல் சேகரன் நினைவுநாளில் வெளியான முக்கிய அறிவிப்பு
இமானுவேல் சேகரன் மணிமண்டபம் 2 மாதங்களில் திறக்கப்படும் என உதயநிதி அறிவிப்பு
தியாகி இமானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு தினத்தையொட்டி, பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில், அரசு சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி மலர் வளையம் வைத்து செலுத்தினார். அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், பெரிய கருப்பன், கயல்விழி செல்வராஜ், தங்கம் தென்னரசு, மூர்த்தி உள்ளிட்டோரும், எம்எல்ஏக்களும் மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், இமானுவேல் சேகரனின் நினைவு மண்டபம் 95 சதவீதம் முடிந்துள்ளதாகவும், 2 மாதங்களில் மணிமண்டபமும், சிலையும் திறக்கப்படும் என்றார்.
Next Story
