திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
14 மாதங்களுக்கு பிறகு தங்கத்தேர் புறப்பாடு- பக்தர்கள் மகிழ்ச்சி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 14 மாதங்களுக்கு பிறகு, மீண்டும் தங்கத்தேர் புறப்பாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த மூன்று வருடங்களாக 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் தங்கத்தேர் புறப்பாடு கடந்த வருடம் ஜூலை மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கோவிலில் 90 சதவீத கட்டுமான பணிகள் நிறைவு பெற்ற நிலையில், வருகிற 4-ஆம் தேதி முதல் வழக்கம்போல் தங்கத்தேர் புறப்பாடு நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Next Story
