ரயில் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு - கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க
Train | Egmore | Tambaram | ரயில் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு - கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க
சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 18ம் தேதி வரை எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை உலகத் தரத்துக்கு மேம்படுத்துவதற்கான பணிகள் தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, இன்று (20ம் தேதி) முதல் ஆகஸ்ட் 18ம் தேதி வரை 9 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை எழும்பூர் - மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயில், தாம்பரத்தில் இருந்து காலை 6.22 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழும்பூர் - மன்னார்குடி இடையே இயக்கப்படும் மன்னை விரைவு ரயில் தாம்பரத்தில் இரவு 11.22 மணிக்கு புறப்படும் என்றும், எழும்பூர் - திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் செந்தூர் விரைவு ரயில் தாம்பரத்தில் இருந்து மாலை 4.27 மணிக்கு இயக்கப்படும்.
எழும்பூர் - குருவாயூர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் தாம்பரத்தில் இருந்து காலை 10.47 மணிக்கும், எழும்பூர் - கொல்லம் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் தாம்பரத்தில் இருந்து மாலை 5.27 மணிக்கும் இயக்கப்படும்.
இத்துடன், தாம்பரம் - ஹைதராபாத் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் என்றும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
