இறக்குமதியாளர்களை குறி வைத்து கோடிக்கணக்கில் மோசடி - போலீசார் விசாரணையில் மோசடி அம்பலம்

இந்திய இறக்குமதியாளர்களை குறி வைத்து சர்வதேச பிரபல கம்பெனிகள் கூட்டு சேர்ந்து கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பது சென்னை போலீசாரின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இறக்குமதியாளர்களை குறி வைத்து கோடிக்கணக்கில் மோசடி - போலீசார் விசாரணையில் மோசடி அம்பலம்
Published on

சென்னை மயிலாப்பூரில் 'பெட்ரோ ப்ரோடக்ட்' எனும் நிறுவனத்தின் மேலாளர் சரவணன், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் அளித்த புகாரில், சர்வதேச நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் இரண்டு கோடியே 65 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தெரிவித்திருந்தார். இது தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கினர். மேலும், சுங்கத் துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டு விசாரணையும் நடைபெற்றது. விசாரணையில் மலேசிய நிறுவனம், இறக்குமதி செய்வதற்கு ஒப்பந்த செய்யப்பட்ட இரண்டு நிறுவனங்கள் என சர்வதேச நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com