ஆர்.கே.நகர் காவல் நிலையம் முன்பு இளைஞர் தீக்குளிப்பு - பரபரப்பு
ஆர்.கே.நகர் காவல் நிலையம் முன்பு இளைஞர் தீக்குளிப்பு - பரபரப்பு
- சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையம் முன்பு இளைஞர் ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- புளியந்தோப்பை சேர்ந்த ராஜன் என்பவரை, அவரது நண்பர்கள் 2 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது.
- இதுதொடர்பாக புகார் அளிக்க காவல் நிலையம் சென்றுள்ளார்.
- அவரது புகாரை போலீசார் வங்க மறுத்ததாக கூறப்படும் நிலையில், திடீரென காவல்நிலைய வாசலில், தன் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு ராஜன் தீ வைத்துக்கொண்டார்.
- பற்றி எரிந்த தீயை, காவல்துறையினர் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். படுகாயமடைந்த நபரை ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ராஜனின் உறவினர்கள் குவிந்ததால், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Next Story

