Immanuel Sekaran | இமானுவேல் சேகரன் குருபூஜை ஊர்வலத்திற்கு எதிர்ப்பு - விரட்டி விரட்டி போலீஸ் தடியடி

இமானுவேல் சேகரன் குருபூஜை ஊர்வலத்திற்கு எதிர்ப்பு - தடியடி

ராஜபாளையத்தில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு ஊர்வலமாக சென்ற ஒரு தரப்பினரை, மற்றொரு தரப்பினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், 2 தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படுவதை தடுக்க, லேசான தடியடி நடத்தி போலீஸார் கூட்டத்தை கலைத்ததால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது போலீசாரிடம் இருந்து லத்தியை பிடுங்க முயன்றபோது இரு பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து ராஜபாளையம் டிஎஸ்பி பஸினா பீவி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com