"நான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்.."பாசமாய் பேசி மூதாட்டியிடம் ஆட்டைய போட்ட ஆசாமி
திருப்பத்தூர் அருகே 75 வயது மூதாட்டியிடம் நூதன முறையில் கொள்ளை அடித்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் லக்கிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகராணி. இவர் ஓய்வூதிய பணத்திற்கான ஆவணங்களை புதுப்பிப்பதற்காக வட்டாட்சியர் அலுவலகம் வந்துள்ளார். அப்போது அவரை நோட்டமிட்ட மர்மநபர் ஒருவர் மூதாட்டியிடம் பேச்சுக்கொடுத்துள்ளார். தொடர்ந்து இடுப்புவலி காரணமாக எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என மூதாட்டி தெரிவித்த நிலையில், நான் சீக்கிரமாக எக்ஸ்ரே எடுத்துக் கொடுத்து அனுப்பி விடுகிறேன் என்று ஆறுதலாக பேசியுள்ளார். இதை நம்பிய மூதாட்டி மர்ம நபருடன் சென்ற நிலையில், மூதாட்டியின் பையில் இருந்த 4000 ரூபாய் ரொக்க பணம் செல்போன் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் என மொத்தத்தையும் மர்ம நபர் திருடி சென்றார். இது குறித்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
