"நான் நிகிதா இல்ல..ராஜினி.."பாஜக நிர்வாகி புகார்

x

போலீசார் விசாரணையில் உயிரிழந்த திருப்புவனம் அஜித்குமார் வழக்கில் தொடர்புடைய நிகிதா என கூறி தமது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதாக பாஜக பெண் நிர்வாகி ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன், நிகிதா இருப்பதாக கூறி புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமாக வலம் வருகிறது. இந்நிலையில் அண்ணாமலையுடன் புகைப்படத்தில் இருப்பது நிகிதா கிடையாது, எனது புகைப்படத்தை தவறாக பரப்புவதாக கூறி பாஜக பெண் நிர்வாகியாக ரா​ஜினி பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். என் மண், என் மக்கள் யாத்திரையின் போது எடுத்த புகைப்படம் என தெரிவித்துள்ள ராஜினி, அவதூறு பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்