30 வருடங்களாக கள்ளக்காதல் : 55 வயது பெண் வெட்டி படுகொலை - 70 வயது முதியவர் கைது

கரூர் மாவட்டம் கடவூர் அருகே, கள்ளக்காதல் விவகாரத்தில் 55 வயது பெண் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
30 வருடங்களாக கள்ளக்காதல் : 55 வயது பெண் வெட்டி படுகொலை - 70 வயது முதியவர் கைது
Published on

சேவாப்பூர் பகுதியைச் சேர்ந்த 55 வயதான பழனியம்மாள் என்பவரும், அதே ஊரைச் சேர்ந்த 70 வயதான ராமசாமி என்பவரும் கடந்த 30 ஆண்டுகளாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. தற்போது பழனியம்மாளுக்கு பேரன், பேத்திகள் உள்ளதால் ராமசாமி உடனான தொடர்பை தொடர மறுத்துள்ளார். இது தொடர்பாக கடந்த ஒரு வருடமாக இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்த நிலையில், நேற்று பழனியம்மாள் வீட்டுக்குச் சென்ற ராமசாமி அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து, பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமசாமியை கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com