வெளிய பாத்தா டீக்கடை.. ஆனா உள்ள பாத்தா.. தீயாய் பரவும் வீடியோ
பெரம்பலூர் அருகே கீற்று கொட்டகை அமைத்து தேநீர் கடை போல் செயல்படும் சந்து கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.
வேப்பந்தட்டை தாலுகாவிற்கு உட்பட்ட நூத்தப்பூர் பாளையம் கிராமத்தில் சிவகுமார் என்பவர் அரசு புறம்போக்கு இடத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
சிவன் கோயில் மற்றும் பெருமாள் கோயில் அருகே நடைபெற்று வரும் மதுபான விற்பனை குறித்து பலமுறை போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Next Story
