Illegal Liquor Sale | ரகசிய குறியீடு மூலம் கள்ளத்தனமாக மது விற்ற நபர் - தேடி தேடி வேட்டையாடிய போலீஸ்
Illegal Liquor Sale | ரகசிய குறியீடு மூலம் கள்ளத்தனமாக மது விற்ற நபர் - தேடி தேடி வேட்டையாடிய போலீஸ்
ரகசிய குறியீடு மூலம் கள்ளத்தனமாக மது விற்ற நபர் அதிரடி கைது சேலம் மாவட்டம் சங்ககிரியில் ரகசிய குறியீடு மூலம் கள்ளத்தனமாக மது விற்ற நபர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். பச்சக்காடு மலை அடிவாரத்தில் உள்ள முட்புதர்களில் மது பாட்டில்களைப் பதுக்கி வைத்து, ரகசிய குறியீடு சொல்பவர்களுக்கு மட்டும் விற்பனை செய்யப்படுவதாகச் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற சங்ககிரி போலீசார், ரகசிய சோதனையில் ஈடுபட்டு படைவீடு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 30-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரகசிய குறியீடு மூலம் அரங்கேறிய இந்த நூதன மது விற்பனை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
