அதிகரித்து வரும் கள்ளச்சாராய கடத்தல் - சாராயம் விற்பனை செய்த 654 பேர் கைது

கொரோனா தடை காலத்தை பயன்படுத்தி கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த 38 பேரை திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கடந்த வாரம் கைது செய்துள்ளது.
அதிகரித்து வரும் கள்ளச்சாராய கடத்தல் - சாராயம் விற்பனை செய்த 654 பேர் கைது
Published on

கொரோனா தடை காலத்தை பயன்படுத்தி கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த 38 பேரை திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கடந்த வாரம் கைது செய்துள்ளது. ஊரடங்கு தொடங்கியதிலிருந்து தற்போது வரை போலீசார் நடத்திய சோதனையில்,37 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டுள்ளன.16 ஆயிரம் லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தலுக்கு பயன்படுத்திய 138 இருசக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 2 நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 654 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com