சேவல் சண்டை சூதாட்டம் - 10 போ கைது...

10 இருசக்கர வாகனம், 4 கோழிகள் பறிமுதல்.
சேவல் சண்டை சூதாட்டம் - 10 போ கைது...
Published on
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே மடத்தூரில் சேவல் சண்டை நடைபெறுவதாக பாவூர்சத்திரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாரை கண்டதும், சேவல் சண்டையில் ஈடுபட்ட பலர் சிதறி ஓடினர். அவர்களை விரட்டிச் சென்ற போலீஸார், 10 பேரைப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பாவூர்சத்திரம், குறும்பலாப்பேரி, மத்தளம்பாறை, கீழப்பாவூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவர்களிடம் இருந்து 10 மோட்டார் சைக்கிள்கள், 4 சண்டை கோழிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்ட 10 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com