``சட்டவிரோத செயல் - வழக்கறிஞர்களுக்கு எதிராக நடவடிக்கை''

x

சொத்துக்களை அபகரிக்கும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் வழக்கறிஞர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க, தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த காரப்பாக்கம் கிராமத்தில் சுமார் 103 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை வழக்கறிஞர்களுடன் சென்று அபகரிக்க முயன்றதாக கண்ணகி நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி வழக்கறிஞர் விஜயகுமார், சுசில் லால்வாணி, ஆர்த்தி லால்வாணி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர் மோகன், சொத்துக்களை அபகரிக்க வாட்ஸ் அப் குழுக்கள் ஆரம்பித்து, கட்சிக்காரர்களுக்காக வழக்கறிஞர்கள் கூலிப்படையினர் போல் செயல்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்