மேடையேறி காலில் விழுந்து அண்ணாமலை சொன்ன வார்த்தை.. உருகிய இளையராஜா
கோவையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, இசையமைப்பாளர் இளையராஜாவின் காலைத் தொட்டு வணங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, இளையராஜா இசைத்த அனைத்து இசையையும் கேட்க வேண்டும் என்றால் அதற்கு 17 ஆண்டுகளாகும் என்றார். நம் மகிழ்ச்சி, துக்கம், தூக்கம் என அனைத்து தருணங்களிலும் இளையராஜாவின் பாடல்கள் நிறைந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். பிரதமர் மோடி, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அன்பு செலுத்தும் ஒரே தலைவர் இளையராஜா என்றும் அண்ணாமலை அப்போது தெரிவித்தார்.
Next Story
