தமிழர்களின் வலிமையை பறைசாற்றும் இளவட்டக் கல் : தூக்குவதற்கு தயாராகும் இளைஞர்கள் - போட்டிபோடும் பெண்கள்

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீர விளையாட்டான இளவட்டக் கல் தூக்கும் போட்டிக்காக இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயிற்சி செய்து வருகின்றனர்.
தமிழர்களின் வலிமையை பறைசாற்றும் இளவட்டக் கல் : தூக்குவதற்கு தயாராகும் இளைஞர்கள் - போட்டிபோடும் பெண்கள்
Published on

தமிழகத்தின் தென் மாவட்டங்களில், கடந்த நூற்றாண்டு வரை இளவட்டக் கல் தூக்கும் வீர விளையாட்டு நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. இவற்றை தூக்கினால்தான் திருமணத்துக்கு பெண் கொடுப்பார்கள் என்கிற வழக்கமும் அந்த காலத்தில் இருந்துள்ளது. இதனால் இதற்கு கல்யாணக் கல் என்ற சிறப்புப் பெயரும் உள்ளது. நாகரீக காலத்தில் அந்த வழக்கம் மறைந்து விட்டாலும், தென் மாவட்டங்களில் இன்னும் சில ஊர்களில் இளவட்டக் கல் சுமக்கும் போட்டி நடத்தப்படுகிறது. வென்றவர்களுக்கு தற்போது பரிசுகள் மட்டுமே உண்டு.

இந்த கல் சுமார் 100 கிலோ எடைகொண்டதாகவும், முழு உருண்டையாக வழவழவென்று எந்தப் பிடிப்பும் இல்லாமல் இருக்கும். கல்லை தோளில் துக்கிய பின்னர், கல்லோடு கோயிலை வலம் வருவது குளத்தை வலம் வருவது என அடுத்தடுத்து போட்டிகள் நடத்தப்படுமாம். உடல் வலிமைக்கு சாட்சியாகத் திகழும் இளவட்டக் கல் தூக்கும் நிகழ்ச்சியை பொங்கல் பண்டிகையின்போது வடலிவிளை கிராமத்தினர் நடத்த உள்ளனர். இதற்காக இந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் பயிற்சி எடுத்து வரும் நிலையில், அவர்களுக்கு போட்டியாக பெண்களும் உரலை தூக்கி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com