சசிகலாவை தொடர்ந்து இளவரசி தரப்பிலும் அபராத தொகை செலுத்தப்பட்டது

சசிகலாவை தொடர்ந்து இளவரசி தரப்பிலும் சுமார் 10 கோடி ரூபாய் அபராத தொகை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.
சசிகலாவை தொடர்ந்து இளவரசி தரப்பிலும் அபராத தொகை செலுத்தப்பட்டது
Published on

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா தரப்பில் அபராத தொகையான 10 கோடியே 10 ஆயிரம் ரூபாய்க்கான 4 வங்கி வரைவோலைகள் நீதிமன்றத்தில் கடந்த வாரம் அளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அதற்கான ரசீதுகளை வழங்கியது. சசிகலா அபராத தொகை செலுத்திய விவரம் குறித்துபரப்பன அக்ரஹார சிறை நிர்வாகத்திற்கு இமெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பெங்களூரு சிறையில் உள்ள இளவரசி தரப்பிலும் அபராத தொகை செலுத்தப்பட்டுள்ளது. 10 கோடியே 10 ஆயிரம் ரூபாய்க்கான 4 வங்கி வரைவோலைகளை இளவரசி தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் அளித்தனர். அதை ஏற்பது குறித்து நீதிமன்றம் பரிசீலித்து வருகிறது. வரும் ஜனவரி 27 ந்தேதி சசிகலா விடுதலை செய்யப்படக்கூடும் என்று எதிர்பார்க்கும் நிலையில் அன்றே இளவரசியும் விடுதலையாகும் வகையில் அபராத தொகை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com