இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகர் விவரீத முடிவு... மேடை பாடகரான சகாயராஜ் வீடியோ வெளியிட்டு த*கொலை

இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகர் விவரீத முடிவு... மேடை பாடகரான சகாயராஜ் வீடியோ வெளியிட்டு த*கொலை
Published on

இசைஞானி இளையராஜாவின் ரசிகரும், மேடை பாடகருமான ஒருவர், தனது சொத்துக்கள் தனியார் நிதி நிறுவனத்தால் முடக்கப்பட இருப்பதாக கூறி வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. முழுப் பின்னணியையும் பார்க்கலாம் விரிவாக...

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அடுத்த சமாதானபுரத்தை சேர்ந்தவர்தான் இந்த சகாயராஜ்..

53 வயதான இவர், இசையமைப்பாளர் இளையராஜாவின் தீவிர ரசிகரான நிலையில், கச்சேரி மற்றும் திருமண விழா போன்ற வைபவங்களில் மேடை பாடகராக வலம் வந்து கொண்டிருந்தார்...

சகாயராஜூக்கு திருமணமாகி மகன் இருக்கிறார்..

இந்நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் மூலம் புதிதாக கார் ஒன்றை சகாயராஜ் வாங்கியதும், அந்த காரை அடுத்த ஆண்டே அவர் சரியாக பணம் செலுத்தவில்லை எனக்கூறி நிறுவனத்தார் பறிமுதல் செய்ததாகவும் தெரிகிறது..

இருப்பினும் இந்த கணக்கு வழக்கில் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை சகாயராஜ் பாக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது...

இந்நிலையில் இதனை பொறியாக கொண்டு, சுமார் 13 வருடம் கழித்து... கடன் பணம் 30 ஆயிரம் ரூபாய்க்கான வட்டியாக 15 லட்ச ரூபாய் நிலுவையில் இருப்பதாகவும், அதனை வசூல் செய்யும் பொருட்டு சகாயராஜின் சொத்துக்களை நிதி நிறுவனம் ஏலம் விட்டதாகவும் சொல்லப்படுகிறது..

இந்த களேபரத்துக்கிடையே, அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சுமார் 90 சதவீத மாற்றுத்திறனாளியாக வீட்டில் முடங்கி இருந்திருக்கிறார் சகாயராஜ்...

இதனால், மேலும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், நிதி நிறுவனத்தின் மேலாளர் மற்றும் ஊழியர் திருப்பதி மீது குற்றம் சுமத்தியும், நீதித்துறையும், காவல்துறையும் தனக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது..

கடைசி காலத்தில் நோய்வாய்ப்பட்டு கடும் இன்னலுக்கிடையே காலம் கழித்து வந்த மேடைப்பாடகர் ஒருவர், நிதி நிறுவனத்தாரின் நெருக்கடியால் தனது குடும்பத்தையும் வீட்டையும் காப்பாற்றுமாறு கூறி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...

X

Thanthi TV
www.thanthitv.com