

பாத்திமா உயிரிழப்பதற்கு முன்னதாக தனது செல்போனில் தெரிவித்திருந்த தகவலின்படி ஐ.ஐ.டி பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன் ஹேமசந்திர காரா மற்றும் மெலின்ஸ் பிராமே ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகக் கோரி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். அதன்படி இன்றைக்குள் மூன்று பேராசிரியர்களும் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மாணவியின் மரணத்திற்கு உரிய நியாயம் கோரி ஐஐடி மாணவர்கள் 6 பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.