சென்னை - ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரத்தில் தொடர்புடைய நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய கைலாஸ் பகுதியில் இருந்து ஐ.ஐ.டி நோக்கி ஊர்வலமாக புறப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.