"பாத்திமா வழக்கு : "சிபிசிஐடியிடம் ஏன் ஒப்படைக்க கூடாது?" - உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை ஐஐடி-யில் நடந்த 14 மாணவர்களின் தற்கொலை தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
"பாத்திமா வழக்கு : "சிபிசிஐடியிடம் ஏன் ஒப்படைக்க கூடாது?" - உயர் நீதிமன்றம் கேள்வி
Published on

சென்னை ஐஐடி-யில் நடந்த 14 மாணவர்களின் தற்கொலை தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இது தொடர்பான பொதுநல வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்த போது, ஐ.ஐ.டி.யில் ஜாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் மாணவர்கள் துன்புறுத்தப்பட்டுள்ளதாக, மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாத்திமாவின் செல்போன் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், முழுமையான விசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, மாணவர்களின் தற்கொலைகள் ஐ.ஐ.டி வளாகங்களில் மட்டும் தான் நடைபெறுகிறதா என சந்தேகம் எழுப்பிய நீதிபதிகள், பாத்திமா மரணம் தொடர்பான வழக்கை ஏன் சிபிசிஐடி-க்கு மாற்ற கூடாது என அரசிடம் கேள்வி எழுப்பினர். பாத்திமா மரணம் தொடர்பான வழக்கை தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவினர் முழுமையாக விசாரித்து முடிக்காத நிலையில், விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற கோர முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். யூகங்களின் அடிப்படையில், வழக்கை ஆரம்ப கட்டத்திலேயே சிபிஐ-க்கு மாற்ற முடியாது எனவும் கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

பாத்திமாவின் கடிதம் உண்மையானது தான்"- தடயவியல் அறிக்கை

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக அவரது மொபைல் போனில் பதிவிட்ட கடிதம் உண்மையானது என, தடயவியல் துறை சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரத்தில் அவரது செல்போனை தடயவியல் துறையினர் ஆய்வு செய்தனர். பின்னர் அந்த அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் மூலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த அறிக்கையில், பாத்திமா எழுதியதாக கூறப்படும் அந்த கடிதம் உண்மையானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com