"ரூ.8000 கட்டினால் ரூ.16000 மதிப்புள்ள ஆடு" -பிரியாணிக்காக காத்திருந்தவர்களுக்கு குஸ்கா கூட இல்லை..

x

எல்லாரும் பக்ரீத் பண்டிகைய மட்டன் பிரியாணியோடு கொண்டாடி வர்ற நிலையில, தென் தமிழகத்துல மட்டும் “பாய் பிரியாணி இன்னும் வரலனு இந்த நிமிஷம் வரைக்கும் வெயிட் பண்ணிக்கிட்டே இருக்காங்க.

வருசாவர்ஷம் பிரியாணில நிறைய பீஸ் போட்டு கொடுக்குற இஸ்லாமிய சகோதர்கள் இந்த வர்ஷம் குஸ்காவ கூட கண்ல காட்டதற்கு காரணம் இந்த Mega Size Goat Scam...

பக்ரீத் பண்டிகைனு சொன்னாலே முதல்ல எல்லாருக்கும் சட்னு Mind-ல Strike ஆகுறது கம கமனு ரெடி ஆகுற பாய் வீட்டு பிரியாணி தான்.

அன்னைக்கு காலையில Fresh-ஆ குர்பானி கொடுக்குற ஆட்ட சுட சுட சமைச்சு அத நண்பர்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் கொடுக்குற இஸ்லாமிய சொந்தபந்தங்கள் எல்லாருமே உண்மையிலயே வேற லெவல் தா..ங்க.

தாங்களும் நல்லா இருக்கனும், தங்கள சுற்றி இருக்கிறவங்களும் நல்லா இருக்கனும்னு நினைச்சவங்கள தான் ஒரு ஆட்டுப்பண்ணையோட உரிமையாளர் ஏமாற்றி “கறிக்கு பதிலா கஸ்டமர்ஸ்க்கு அல்வா கொடுத்துட்டு எஸ்கேப் ஆகி இருக்காரு.

நடந்த சம்பவத்தோட முழுப்பின்னணியையும் அறிய சிவகங்கை செய்தியாளர் சுந்தரை விசாரணை களத்தில் இறக்கியது நம்முடைய குற்றசரித்திர நிகழ்ச்சி குழு..

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஆயிஷாம்மா ஆட்டுப்பண்ணை கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.

இந்த பண்ணையின் உரிமையாளர் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய சொந்தப்பந்தங்களுக்கு ஒரு அதிரடி ஆஃப்பரை வெளியிட்டிருக்கிறார்.

அதில், பக்ரீத் பண்டிகையின் ஒருவருடத்திற்கு முன்பாகவே ரூபாய் 7000 பணம் செலுத்தினால், அடுத்த வருடம் பக்ரீத் பண்டிகையின் போது ரூபாய் 16000 மதிப்புடைய 25 முதல் 30 கிலோ எடைக்கொண்ட ஆடு... குர்பானி கெட் அப்பில் டோர் டெலிவரி செய்யப்படுமென அறிவித்திருந்தார்.

கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள அனைத்து ஊர்களிலும் தாங்கள் டெலிவரி செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

மேலும், இந்த அறிவிப்பை பிரபலமடைய செய்ய இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் Influencer-களின் மூலமும் புரோமோட் செய்துள்ளனர். அதில் மதுரையை சேர்ந்த பெண் யூடியூபரான சோறு கண்ட இடமே சொர்க்கம்ப்பா சேனலின் நிறுவனர் Nowfa Azar-ம் இருந்துள்ளார்.

நம்பிக்கைக்குரியவர்களே புரோமட் செய்த காரணத்தால் ஐந்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் Pre Booking செய்ததாக சொல்லப்படுகிறது.

அதில் சிவகங்கையிலிருந்து மட்டும் 300 இஸ்லாமிய சகோதரர்கள் ஆயிஷாம்மா ஆட்டுப்பண்ணையில் தலைக்கு ரூபாய் 7000 பணம் செலுத்தி உள்ளனர்.

இந்நிலையின் இன்று பக்ரீத் கொண்டாட்டத்திற்கு தயாராக இருந்தவர்கள் குர்பானி கொடுப்பதற்காக பண்ணையிலிருந்து ஆடு வரும்.. வரும்... என வழிமேல் விழி வைத்து காத்திருந்துள்ளனர். ஆனால், அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது.

ஆயிஷாம்மா ஆட்டுப்பண்ணையின் உரிமையாளரை தொடர்புக்கொள்ள முயற்சித்தப்போது அவர் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளார்.

இதைதொடர்ந்து பிரபல யூடியூப் Food Vlogger-ஆன nowfa azar-ரிடம் உன்னுடைய விளம்பரத்தை நம்பி தான் பணம் கொடுத்தோம், அதன்காரணமாக நாங்கள் ஆயிஷாம்மா ஆட்டுப்பண்ணையில் கொடுத்த பணத்தை நீதான் திருப்பி கொடுக்க வேண்டுமென கமெண்ட் பாக்ஸிலும், இன்பாக்ஸிலும் மெசெஜ் செய்திருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக nowfa azar-ம் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் விளக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்