PF திட்டத்தில் புதிதாக சேர்ந்தால் அரசே ரூ.15 ஆயிரம் கொடுக்கும்

x

புதிதாக பிஎஃப் திட்டத்தில் சேரும் ஊழியர்களுக்கு ஓராண்டில் 15 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார். ஊழியர்களை மட்டும் இன்றி நிறுவனங்களை ஊக்கப்படுத்தவும் ஊக்கத்தொகையானது வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் ஊழியருக்கு ஊதியம் கொடுக்கும் நிறுவனத்திற்கு மாதம் ஆயிரம் ரூபாயும், இருபதாயிரம் வரை ஊதியம் கொடுத்தால் மாதம் இரண்டாயிரமும், ஒரு லட்சம் வரை ஊதியம் கொடுத்தால் மாதம் மூவாயிரம் ரூபாயும் ஊக்கதொகையாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்