"பணம் கொடுத்தால் அப்படியே இரண்டு மடங்காகும்.." சொன்னதை நம்பி பணத்தை கொட்டிய மக்களுக்கு பேரிடி
"பணம் கொடுத்தால் அப்படியே இரண்டு மடங்காகும்.." சொன்னதை நம்பி பணத்தை கொட்டிய மக்களுக்கு பேரிடி
வாணியம்பாடியில், தங்கத்தில் மூதலீடு செய்தால், இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என மக்களை ஏமாற்றி, பண மோசடி செய்த நகைக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர், ரூபி ஜூவல்லரி என்ற நகைக்கடை நடத்தி வரும் நிலையில், தங்கத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி பொதுமக்கள் பலர் இவரிடம் பணத்தை கொடுத்துள்ளனர். பிறகு பணம் ஏமாற்றப்பட்டதை அறிந்த பொது மக்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். தலைமறவைவாக இருந்த நகைகடை உரிமையாளரை சென்னையில் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
