``எங்கிட்டயே இப்படி பண்றீங்கன்னா, பொதுமக்கள் நிலை?’’ போலீசிடம் தாசில்தார் வாக்குவாதம்
என்னிடமே இத்தனை கேள்வியா- தாசில்தார் போலீசிடம் வாக்குவாதம்
சென்னையில் சவுடு மணல் வாகனத்தை சிறை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த தாசில்தார், காவலர்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரவாயல் பகுதியில் போதிய ஆவணம் இன்றி சவுடு மணல் கடத்திவரப்பட்ட வாகனத்தை பூந்தமல்லி தாசில்தார் பறிமுதல் செய்து, வானகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்நிலையில் தாசில்தாரை போலீசார் காவல் நிலையத்திற்கு உள்ளே அழைத்ததால் ஆத்திரமடைந்த தாசில்தார், என்னிடமே இத்தனை கேள்வி கேட்கிறீர்கள் என்றால், பொதுமக்களின் நிலை என்னவாக இருக்கும் என காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
Next Story
