விஜய் ஆணையிட்டால்.." எதிரொலித்த நேற்றைய பேச்சின் வீரியம்.. அரசுகளுக்கு பரந்தூரில் பறந்த எச்சரிக்கை
பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடக்கோரி, த.வெ.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், விஜய்க்கு, பரந்தூர் போராட்ட குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகாரிகளின் பேச்சை நம்பி, தமிழ்நாடு அரசு விவசாயத்தையும், பாரம்பரியமான குடியிருப்புகளையும் அழித்து வருவதாகவும், சொந்த நாட்டில் அகதிகளாக மாற்றப்படும் அராஜகத்தை தொடர்ந்து கண்டித்து வரும் தவெக தலைவர் விஜய், தங்களுக்கு எப்போதும் பாதுகாப்பு அரணாக இருப்பார் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடாத பட்சத்தில், விவசாய பெருமக்களை தானே தலைமைச் செயலகம் அழைத்து வருவேன் என்ற விஜய்யின் பேச்சை சுட்டிக்காட்டியுள்ள போராட்ட குழுவினர், அவர் ஆணையிட்டால் ஓர் அணியாய் திரண்டு அரிட்டாபட்டியை, மத்திய மாநில அரசுகளுக்கு மீண்டும் நினைவுபடுத்துவோம் என எச்சரித்துள்ளனர்.