``ஆட்சியில் பங்கு தரவில்லையென்றால் விஜய் கூட்டணியை நோக்கி காங்கிரஸ் கிளி பறந்துவிடும்''
ஆட்சியில் பங்கு தந்தால் மட்டுமே திமுகவோடு கூட்டணி என்றும், இல்லையெனில் விஜய் கூட்டணியை நோக்கி காங்கிரஸ் கிளி பறந்துவிடும் என்றும் காங்கிரஸ் நிர்வாகி வேல்முருகன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட மதுரை - சிந்தாமணி பகுதி தலைவர் வேல்முருகன், திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் இருக்கிறது என்றும், திமுக ஆட்சியில் பங்கு தந்தால் மட்டுமே திமுகவோடு கூட்டணி எனவும் தெரிவித்தார்.
Next Story
