``இன்னும் ஒரு மாதத்தை தாண்டினால்..'' - SBI வெளியிட்ட பகீர் அறிக்கை
SBI Savings Account Holders | ``இன்னும் ஒரு மாதத்தை தாண்டினால் வங்கி கணக்குகள் மூடப்படும்'' - SBI வெளியிட்ட பகீர் அறிக்கை - ``அக்கவுண்டில் பணம் இருந்தாலும்..''
தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல முன்னணி நாளிதழ்களில வெளியாகியிருக்கும் ஸ்டேட் வங்கியின் விளம்பரம் கவனத்தை ஈர்த்திருக்கு. ஸ்டேட் வங்கியை பொறுத்தவரை பொதுத்துறை வங்கி. தனியார் வங்கிகளை ஒப்பிடும்போது வட்டி விகிதம் குறைவு. சேவையும் நன்றாக இருக்கும். உதாரணத்துக்கு சொல்லனும்னா, நீங்க ஸ்டேட் பாங்க்ல ஹவுசிங் லோன் எடுத்திருந்தா RBI- வங்கிகளுக்கான ரெப்போ ரேட்டை மாற்றியமைக்கும்போது, குறிப்பா குறைக்கும்போது, நீங்க எதுவுமே செய்ய தேவையில்லாம உங்க கடன் மீதான வட்டையையும் தானாகவே குறைக்கும் வங்கி ஸ்டேட் வங்கிதான். மத்த தனியார் வங்கியெல்லாம் அப்படி அல்ல. நீங்க நேர்ல போய் முறையா அதுக்கான Procedures அ முடிச்சு, கூடவே ஒரு சிறு கட்டணமும் கட்டினாதான் வட்டி குறைப்பை அமல்படுத்த முடியும். இப்படி ஸ்டேட் வங்கி போன்ற பொதுத்துறை வங்கிகள் மக்களுக்கு சேவை அடிப்படையில செயல்படுபவை. ஆனாலும், அவ்வபோது வங்கியின் அறிவிப்புகள் சலசலப்பை ஏற்படுத்தும், சர்ச்சையை உண்டாக்கும். அந்த வரிசையில்தான் இப்ப நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் விளம்பரம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கு. ஸ்கிரீன்ல முதல்ல அந்த விளம்பரத்த பார்க்கலாம்.
