பழமையான சுவாமி வாகனங்கள் கண்டுபிடிப்பு : ரன்வீர் ஷாவை கைது செய்ய தீவிர நடவடிக்கை

சென்னை கிண்டியில் உள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷா அலுவலகத்தில்,சோதனை நடத்தியதில் 500 ஆண்டுகள் பழமையான சுவாமி வாகனங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பழமையான சுவாமி வாகனங்கள் கண்டுபிடிப்பு : ரன்வீர் ஷாவை கைது செய்ய தீவிர நடவடிக்கை
Published on
சென்னை கிண்டியில் உள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷா அலுவலகத்தில், இன்று ஐ.ஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தியதில் 500 ஆண்டுகள் பழமையான சுவாமி வாகனங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் குஜராத்திற்கு கடத்தப்பட இருந்ததாக கூறப்படுகிறது. இதுவரை ரன்வீர்ஷா விசாரணைக்கு ஆஜராகாததால், அவரை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com