திருச்சி மாவட்டத்தில் உள்ள 1300 ஆண்டு பழமையான திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோவிலில், ஐம்பொன்னாலான அங்காளம்மன் சிலை திருடு போனது. இது தொடர்பாக, பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் தொடர்ந்த வழக்கில், கோவிலின் செயல் அலுவலர் ஆனந்தகுமார் ராவ் கைது செய்யப்பட்டார். அவரை 19ம் தேதி வரை சிறையில் அடைக்க கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. அதன்படி, ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, நேற்று மாலை அவரை போலீசார், ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.