ICU-வில் துடிக்கும் குழந்தை.. செய்தது யார்? - மற்றொரு மழலை சொன்ன அதிர்ச்சி `சாட்சி'
சேலம் அருகே 3 வயது குழந்தை தலையில் காயத்துடன் உயிருக்கு போராடும் நிலையில், குழந்தையின் தாய் மீதும், அவரது இரண்டாவது கணவர் மீதும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளார். சண்முகப்பிரியா என்கிற இளம்பெண் முதல் கணவரான பசுபதியை பிரிந்து, தனது 2 ஆண் குழந்தைகளுடன் தமிழரசன் என்பவருடன் வசித்து வந்துள்ளார். இவரது 3 வயது மகனான வெற்றிமாறன், தலையில் ரத்த கசிவு ஏற்பட்ட உயிருக்கு ஆபத்தான நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சண்முகப்பிரியாவின் 2வது கணவர் மதுபோதையில் தாக்கியதாலேயே சிறுவன் உயிருக்கு போராடுவதாக, உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Next Story
