திடீரென பயங்கர சத்தத்துடன் தாழ்வாக பறந்து பதறவைத்த IAF விமானங்கள்..
திடீரென பறந்த விமானப்படை விமானங்கள் - சலசலப்பு
வானில் பறந்த விமான படையின் இரட்டை விமானங்களால் தர்மபுரியில் பரபரப்பு இன்று காலை தர்மபுரி நகரத்தின் மீது திடீரென இரட்டை விமானங்கள் ஒன்றாக பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
தர்மபுரியில் இன்று காலையிலேயே மிகவும் தாழ்வாகவும் அதிக சத்தத்துடன் அதிவேகமாக நகரின் மீது விமான படையின் விமானங்கள் சுற்றி சுற்றி மூன்று முறை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது .இதற்கு முன்பு இது போல் நடந்ததில்லை என்ற பொது மக்கள் வந்து கருத்து தெரிவிக்கின்றனர்.
இது குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்ட பொழுது பெங்களூருவில் எலன்காவில் இந்திய விமானப்படை தளம் உள்ளது.
.மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சேலம் மாவட்டத்தில் விமானிகளுக்கான விமானம் ஓட்ட பயிற்ச்சி பயிற்சி பள்ளிகள் இயங்குகின்றன. அவர்கள் சில நேரங்களில் எப்பொழுதுவது விமானங்களை இங்கு வந்து இயக்குவது வழக்கம் .
இதிலும் மேம்பட்ட அல்லது அனுபவம் மிகுந்த விமான ஓட்டி பயிற்சி எடுத்தவர்களை தங்களது இலக்குகளை அதிகமாக நிர்ணயித்து தொலைதூரமாக வந்த கண்காணித்து பரப்பார்கள். அப்படி பறக்கும் பொழுது அவர்களுக்கு துணையாக மற்றொரு விமானத்தில் பயிற்சி விமானங்களும் வந்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் இதனாலே வந்து இரட்டை விமானங்கள் பறந்ததாக கருத்து தெரிவிக்கின்றனர். இருந்தாலும் இந்த சம்பவத்தில் பொதுமக்களுக்கு முழுமையான தகவல் கிடைக்காத காரணத்தினாலும் ஒரு அதிர்ச்சியும் குழப்பத்திலும் சில மணி நேரம் காணப்பட்டனர். இந்த விமானங்கள் காலை 7:00 மணி முதல் 11.00 மணி வரை அடிக்கடி மூன்று முறைக்கு மேல் பறந்ததாலே இந்த பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகும் .
