"ரொம்ப கஷ்டப்பட்டேன்.. வீடு தேடி வந்து கொடுத்தாரு.." -மூதாட்டி பேட்டி
வீடு தேடி ரேஷன் வழங்கும் தாயுமானவர் திட்டம் தொடக்கம்
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடு தேடி சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தண்டையார்பேட்டை பகுதிக்கு நேரில் சென்ற முதலமைச்சர், வீடு தேடி சென்று மூதாட்டிகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்கி நலம் விசாரித்தார்.
இதன் திட்டத்தின் கீழ் தனியாக வசித்து வரும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் ஒவ்வொரு மாதமும் 2வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படுத்தப்படுகிறது. முதல்வர் வருகை, தாயுமானவர் திட்டம் குறித்து பேசிய பயனாளிகள், ரேஷன் பொருட்களுக்காக இனி மணிக்கணக்கில் நிற்க தேவையில்லை என மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Next Story
