"CM-அ பாக்கணும்.." 90வது பிறந்தநாளில் விருப்பத்தை சொன்ன நடிகை

x

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் தனது 90வது பிறந்த நாளை 4 தலைமுறை குடும்ப உறுப்பினர்களோடு கொண்டாடி மகிழ்ந்தார்...

தமிழ், தெலுங்கு திரையுலகில் 1950 -1960 காலகட்டங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தபர் எம்.என்.ராஜம்... 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ள இவர் ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் எம்.ஆர்.ராதாவுடன் இணைந்து நடித்த வேடம் இவரது திரை வாழ்வில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது... எம்ஜிஆர், சிவாஜி, எம் ஆர் ராதா என தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களோடு நடித்து புகழ்பெற்ற இவர் தனது 90வது பிறந்த நாளை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் மகன், மருமகள், பேரப்பிள்ளைகள், கொள்ளு பேரப்பிள்ளைகளோடு கொண்டாடி மகிழ்ந்தார். அத்துடன் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டார்...


Next Story

மேலும் செய்திகள்