எமர்ஜென்சின்னு அப்படியே வந்துட்டேன்.. காசும் எடுத்துட்டு வரல" | செவிலியர் வருத்தம்

x

பெண் செவிலியரை நடுரோட்டில் இறக்கிவிட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்

ஆத்தூர் அரசு மருத்துவமனை பெண் செவிலியர் ஒருவர், அவசர சிகிச்சைக்காக நோயாளியுடன் சேலம் சென்று திரும்பும்போது 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நடுவழியில் இறக்கிவிட்டதால் அவதிக்கு உள்ளாகினார். ஆத்தூர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் திவ்யா என்பவர், அவசர சிகிச்சைக்காக வந்த நோயாளியை 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் மீண்டும் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு செவிலியர் வர வேண்டிய நிலையில், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் நடுவழியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்