"நிலம் வாங்கி உள்ளதால், சென்னையில் குடியேற விருப்பம்" - உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி கருத்து

சென்னையிலேயே குடியேற விரும்புவதால், இங்கு நிலம் வாங்கியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி தெரிவித்துள்ளார்.
"நிலம் வாங்கி உள்ளதால், சென்னையில் குடியேற விருப்பம்" - உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி கருத்து
Published on

சென்னையிலேயே குடியேற விரும்புவதால், இங்கு நிலம் வாங்கியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி தெரிவித்துள்ளார். மெட்ராஸ் பார் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், இதனை தெரிவித்தார். மேலும், பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக தலைமை நீதிபதியாக பணியாற்றியது குறித்து பெருமை கொள்வதாக கூறிய அவர், தனது பணி காலத்தில் 5 ஆயிரத்து 40 வழக்குகளை நியாயமான வகையில் முடித்து வைத்ததாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள் மணிக்குமார், கிருபாகரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com