''ஆசையை நிறைவேற்றிவிட்டேன்'' - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம்

x

கவுண்டன்யா ஆற்றை தூய்மைப்படுத்தியுள்ளேன் - அமைச்சர் துரைமுருகன்

தாமிரபரணி, காவிரி, தென்பெண்ணை ஆறுகளைப் போன்று, குடியாத்தம் கவுண்டன்யா ஆற்றையும் தூய்மைப்படுத்தியுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் தெரிவித்துள்ளார். குடியாத்தம் நகரில் கவுண்டன்யா ஆற்றின் குறுக்கே ஜங்காலபள்ளி செதுக்கரை குறுக்கே கட்டபட்ட தடுப்பணை, நடைபாதை, தாளையாத்தம் சுண்ணாம்புபேட்டை இடையே கட்டப்பட்ட தரைப்பாலம் ஆகியவற்றை, அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் காந்தி, குடியாத்தம் நகரம் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், கவுண்டன்யா ஆற்றை தூய்மைப்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும், தற்போது தூய்மைப்படுத்தியுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்